Home பிரதான செய்திகள்🏏 டி-20 உலகக் கிண்ணம் 2026  முதலாவது போட்டியில்  பாகிஸ்தான்  வெற்றி!

🏏 டி-20 உலகக் கிண்ணம் 2026  முதலாவது போட்டியில்  பாகிஸ்தான்  வெற்றி!

by admin

இன்று இலங்கையில் நடைபெற்ற 10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண (ICC Men’s T20 World Cup 2026) தொடாில் 03 விக்கெட்டுக்களால் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி திரில் வெற்றியீட்டியுள்ளது

கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் தோற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி (19.5 ஓவர்களில்) அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து) 147 ஓட்டங்கள் பெற்றது. அணித்தலைவர் ஸ்காட் எட்வர்ட்ஸ் (Scott Edwards) 37 ஓட்டங்களையும், பாஸ் டி லீடே (Bas de Leede) 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் சல்மான் மிர்சா (Salman Mirza) அபாரமாகப் பந்துவீசி 03 விக்கெட்டுக்களைச் சாய்த்தார். நவாஸ், அப்ரார் அஹமட் மற்றும் சைம் அயூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

148 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இறுதி ஓவர் வரை போராடி 19.3 ஓவர்களில் 7 விக்கட்டுக்கள் இழப்புக்கு 151 ஓட்டங்கள் பெற்று வெற்றியை வசப்படுத்தியது.

சாகிப்ஸாதா ஃபர்ஹான் (Sahibzada Farhan) 47 ஓட்டங்களைக் குவித்து வெற்றிக்கு அடித்தளமிட்டார். இறுதியில் ஃபஹீம் அஷ்ரப் (Faheem Ashraf) ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார். நெதர்லாந்து அணியின் ஆர்யன் தத் மற்றும் பால் வான் மீகெரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இதேவேளை சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று இரவு 7:00 மணி (இலங்கை நேரப்படி). கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Tag Words: #T20WorldCup2026 #PAKvNED #CricketNews #ColomboSSC #PakistanCricket #LKA #SaimAyub #WorldCupOpener

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More