Home இலங்கையாழ்ப்பாணம்: செம்பியன்பற்றில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு மீட்பு!

யாழ்ப்பாணம்: செம்பியன்பற்றில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு மீட்பு!

by admin
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் வெடிக்காத நிலையில் பாரிய மோட்டார் குண்டு ஒன்று இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், வழக்கம் போல் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக அருகில் உள்ள பற்றைக்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். இதன்போது, புதர்களுக்கு இடையே சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அருகில் சென்று பார்த்தபோது, அது வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் குண்டு என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருதங்கேணி காவற்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவலறிந்த மருதங்கேணி காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியைச் சூழ பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மோட்டார் குண்டை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காகவும், அதனை செயலிழக்கச் செய்வதற்காகவும் கிளிநொச்சி நீதிமன்றின் அனுமதியைப் பெறுவதற்கு காவற்துறையினர் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குண்டு அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More