Home இலங்கை🏍️ பொன்னாலையில்   மோட்டார் சைக்கிள்  பனைமரத்துடன் மோதி விபத்து – இளைஞன் பலி

🏍️ பொன்னாலையில்   மோட்டார் சைக்கிள்  பனைமரத்துடன் மோதி விபத்து – இளைஞன் பலி

by admin

யாழ்ப்பாணம், பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளாா். அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த பனை மரத்துடன் மோதுண்டதே இந்த விபத்துக்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய இளைஞன் மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளின் அதீத வேகம் காரணமாக வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பனை மரத்தில் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மத்தியில் அதீத வேகத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தும் கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும், இதனால் பல உயிர் இழப்புகள் ஏற்படுவதாகவும் காவல்துறையினா் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களிலும் வளைவுகள் நிறைந்த வீதிகளிலும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tag Words: #JaffnaAccident #PonnalaiNews #RoadSafety #MotorbikeCrash #BreakingNews2026 #JaffnaTeachingHospital #LKA #SafeDriving

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More