240
THAAD (Terminal High Altitude Area Defense) என்பது வளிமண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வரும் குறுகிய, நடுத்தர மற்றும் இடைப்பட்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானிலேயே தடுத்து அழிக்கும் திறன் கொண்ட உலகின் அதிநவீன பாதுகாப்பு அமைப்பாகும். இது “தாக்குதலைத் தகர்க்கும்” (Hit-to-kill) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
சமீபத்திய பாதுகாப்புத்துறை அறிக்கைகளின்படி, அமெரிக்கா தனது THAAD மற்றும் பேட்ரியாட் (Patriot) ஏவுகணை அமைப்புகளை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கட்டார், குவைத், பஹ்ரைன் ஆகிய முக்கிய நாடுகளில் நிலைநிறுத்தியுள்ளது அல்லது பலப்படுத்தியுள்ளது:
இதன்மூலம் வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி வருகின்றன.
ஈரானுடனான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், தனது படைகளையும் நட்பு நாடுகளையும் பாதுகாக்க அமெரிக்கா வளைகுடா பிராந்தியத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எனினும் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள், ஈரான் மீதான தாக்குதலுக்குத் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தாலும், தற்காப்பு நடவடிக்கைகளுக்காக THAAD அமைப்புகளைத் தொடர்ந்து பராமரித்து வருகின்றன.
________________________________________
Spread the love

