174
கடந்த வாரம், சவுத்தாம்ப்டனின் பாலிகான் (Polygon) பகுதியில் உள்ள ஒரு முகவரியில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்தது. இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் , சவுத்தாம்ப்டன் சிர்தார் சாலையைச் (Sirdar Road) சேர்ந்த வியான் சுரேந்திரநாதன் (21) என்பவரை கைது செய்தனர்.
குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பெப்ரவரி 9, திங்கட்கிழமை அன்று சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (Southampton Magistrates’ Court) முன்னிலைப் படுத்தப்பட்டார். விசாரணை தொடர்கிறது.
குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை, குற்றம் சாட்டப்பட்டவர் சட்டப்படி குற்றமற்றவராகவே கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் (Southampton) நகரில் 19 வயது இளம் பெண் ஒருவரை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் மீது காவல்துறையினர் உத்தியோகபூர்வமாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வியான் சுரேந்திரநாதன் பாலியல் பலாத்காரம் (Rape) 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தமை, பாலியல் செயல்பாட்டிற்கு இணங்க வைக்கும் நோக்கில், பெண்ணுக்கு மயக்கமடையச் செய்யும் அல்லது உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பொருளை வழங்கியமை, ‘வகுப்பு A’ (Class A) வகையைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட போதைப்பொருளை வைத்திருந்தமை, ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் புலம்பெயர் மக்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
________________________________________
Spread the love

