Home இலங்கை🏛️ அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில்   மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

🏛️ அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில்   மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

by admin

மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (2026-02-10)போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க , அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ,நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சத்தியலிங்கம், ரவிகரன், ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோருடன் அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள் மற்றும் துறைசார் தலைவர்கள் கலந்து கொண்டனா்

மன்னார் மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் (மன்னார் நகர சபை, நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி) நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆராயப்பட்டது.

மாவட்டத்தில் பழுதடைந்துள்ள வீதிகளை உடன் புனரமைத்தல் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தல், மன்னார் மாவட்டத்தின் சுற்றுலா சாத்தியக்கூறுகளை நகர அபிவிருத்தி திட்டங்களுடன் இணைத்து வலுப்படுத்துதல் என்பன குறித்து ஆராயப்பட்டன.

மன்னாரில் இருந்து இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை மீண்டும் மக்கள் பாவனைக்காகத் திறந்துவிடுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க இனிவரும் காலங்களில் இவ்வாறான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் குறைந்தபட்சம் ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் நடத்தப்படும் எனத் தொிவித்தாா்

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்டத்தின் அபிவிருத்திக்காகத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும் . இந்த அரசியல் தலைவர்களும் நிர்வாக தலைவர்களும் திட்டமிட்டுள்ள வகையில் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம், என்றார்.

 

Tag Words:#MannarDevelopment #BimalRathnayake #RoadInfrastructure #SriLankaNews2026 #MannarSecretariat #MusaliRoad #UrbanDevelopment #LKA

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More