189
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. எனினும், இன்று (புதன்கிழமை) அவர்களது சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் (Motion) ஊடாக பிணை விண்ணப்பம் கோரப்பட்டது. இதனை பரிசீலித்த மன்று, தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா இரு ஆள் பிணைகளில் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டது.
சம்பவத்தின் போது வாகனத்தில் இருந்தவர்கள் வழங்கிய முக்கிய தகவல்கள்:
குறித்த நபர்கள் மாடு திருடும் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், அவர்கள் மீது முன்னைய குற்றச்சாட்டுகள் எதுவும் இருப்பதாக காவற்துறையினர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.
வவுனியாவில் புதிதாக வாங்கிய வாகனத்தில், கிளிநொச்சி உமையாள்புரத்தில் உள்ள தமது வயல் அறுவடைக்காக ஆட்களை ஏற்றிச் செல்லவே வேலணைக்குச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளனர். அல்லைப்பிட்டியில் காவற்துறையினர் மறித்தபோது சிறுவன் வாகனத்தை நிறுத்தாது சென்றார். மண்டைதீவு காவலரணில் காவற்துறையினர் மறிக்கத் தயாராக இருந்ததால் மீண்டும் அல்லைப்பிட்டி நோக்கித் திரும்பியபோது, பின் தொடர்ந்த காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் மட்டுமே கேட்டதாகவும், அதன் பின்னரே சிறுவன் வாகனத்தை நிறுத்தி மயங்கிச் சரிந்ததாகவும் தெரிவித்துள்ளனர். வாகனத்தில் இருந்ததாகக் கூறப்படும் சாணகம், கயிறு, வாள் மற்றும் மேலதிக துப்பாக்கிச் சூட்டுத் தழும்புகள் பற்றி தமக்கு ஏதும் தெரியாது என அவர்கள் மறுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நாளைய தினம் வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளது.
________________________________________
Spread the love

