Home இலங்கைமன்னாரில் பாரிய போதைப்பொருள் வேட்டை: 50 கிலோ ஹஷீஷ் மீட்பு!

மன்னாரில் பாரிய போதைப்பொருள் வேட்டை: 50 கிலோ ஹஷீஷ் மீட்பு!

by admin
மன்னார் கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 50 கிலோகிராமுக்கும் அதிகமான ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை (14), மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மீன்பிடி படகொன்றை கடற்படையினர் இடைமறித்து சோதனையிட்டனர். இதன்போது படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெரிய பொதிகள் மீட்கப்பட்டன.
அந்தப் பொதிகளில் 50 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஹஷீஷ்’ (Hashish) போதைப்பொருள் இருப்பது சோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் படகில் இருந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கண்காணிப்பு நடவடிக்கைகள் மன்னார் கடல் பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More