Home இலங்கைபழைய பூங்காவினுள் உள்ள கட்டடங்களுக்கு அனுமதிகள் இல்லை ?

பழைய பூங்காவினுள் உள்ள கட்டடங்களுக்கு அனுமதிகள் இல்லை ?

by admin

யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் உள்ள எந்த கட்டடங்களுக்கும் அனுமதி வழங்கியமைக்கான ஆவணங்கள் தம்மிடம் இல்லை என்றும் , அவை எதற்கும் வாடகை அறவிடப்படவிலை எனவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் இனி வருங்காலத்தில் எந்த திணைக்களத்திற்கும் காணி வழங்குவதில்லை எனவும் , பழைய பூங்கா வளாகத்திற்கான நம்பிக்கை நிதியம் உருவாக்குவது என கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் மாவட்ட செயலர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் வளாகத்தில்  உள்ள திணைக்களங்களிலிருந்து காணிக்கான விலைமதிப்பீட்டிற்கு அமைய, வாடகை அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது

இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட செயலர் தலைமையிலான குழுவினர் பழைய பூங்கா பகுதிக்குள் நேரில் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டங்களை பார்வையிட்டு இருந்தனர்.இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு , 09 மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரைக்கும் பழைய பூங்காவினுள் உள்ள கட்டடங்களுக்கு வாடகை அறவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் , வாடகை பணம் அறவீடு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , பழைய பூங்காவினுள் அமைக்கப்பட்டுள்ள கட்டங்களுக்கான அனுமதிகள் தொடர்பில் கேட்ட போது , மாவட்ட செயலகத்தினால் அனுமதிகள் வழங்கப்படவில்லை எனவும் , கட்டங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டமைக்கான ஆவணங்கள் தமது கட்டுக்காப்பில் இல்லை எனவும் மாவட்ட செயலகம்  தெரிவித்துள்ளது.

அதேவேளை “பழைய பூங்கா வளாகத்தில் இனி வருங்காலத்தில் எந்த திணைக்களத்திற்கும் காணி வழங்குவதில்லை” என  தீர்மானம்  எடுக்கப்பட்டு , 6 மாத கால பகுதிக்குள் பழைய பூங்கா வளாகத்தினுள் உள்ள விளையாட்டரங்கு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More