Home உலகம்🚨 முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது 

🚨 முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது 

by admin

பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்பு மற்றும் அரசுப் பணியில் இருந்தபோது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் காரணமாக  இன்று, வியாழக்கிழமை (பெப்ரவரி 19, 2026), பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor),  கைது செய்யப்பட்டுள்ளாா்.

ஆண்ட்ரூ பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகத் தூதராக (UK Trade Envoy) இருந்தபோது (2001-2011), ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட மில்லியன் கணக்கான ஆவணங்களில், ஆண்ட்ரூ மற்றும் எப்ஸ்டீன் இடையேயான மின்னஞ்சல் தொடர்புகள் மற்றும் ரகசியத் தகவல்கள் கசிந்துள்ளதே இந்தக் கைதுக்கு முக்கியக் காரணமாகும்.

 ஏற்கனவே வர்ஜீனியா கிஃபெரே (Virginia Giuffre) சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் இவருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த புதிய ஆதாரங்கள் கைதிற்கு வழிவகுத்துள்ளன.

இன்று காலை 8 மணியளவில், நோர்போக்கில் (Norfolk) உள்ள சாண்ட்ரிங்ஹாம் (Sandringham) எஸ்டேட்டில் உள்ள அவரது வசிப்பிடத்தில் வைத்து தேம்ஸ் பள்ளத்தாக்கு  காவல்துறையினரால்  (Thames Valley Police) அவர் கைது செய்யப்பட்டார். சிவில் உடையில் வந்த காவல்துறையினர் அவரது இல்லத்தை முற்றுகையிட்டு சோதனையிட்டதுடன், மடிக்கணணி உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.மேலும்  தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு எவ்வித விசேட சலுகைகளும் வழங்கப்படாது என  காவல்துறையினா தெரிவித்துள்ளனர்.

மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோதரரின் கைது குறித்து “ஆழ்ந்த கவலை” தெரிவித்துள்ளார். இருப்பினும், “சட்டம் தன் கடமையைச் செய்யும்” (The law must take its course) என்றும், விசாரணைக்கு அரச குடும்பம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

#PrinceAndrew #JeffreyEpstein #RoyalScandal #BuckinghamPalace #Arrest2026 #KingCharles #UKNews #Justice #BreakingNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More