குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸவின் வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்டுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பூகொட மாவட்ட நீதவான் டி.ஏ.ருவான் பத்திரண இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளார்.
மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை 64 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை மற்றும் அந்தக் காணியில் 125 மில்லியன் ரூபா செலவில் வீடு கட்டியமை ஆகியன தொடர்பில் நிதிச் சலவை சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகின்றது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினா தொடர்பில் பூகொட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு எதிர்வரும் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அம்பியூலன்ஸ் வண்டியில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த பெசில் ராஜபக்ஸவை நீதவான் அம்பியூலன்ஸ் அருகாமைக்கு சென்று கண்காணித்தார்.
விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை எனவும் வங்கிக் கணக்கு விபரங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் வங்கிக் கணக்கு விபரங்களை விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.