Home இலங்கை⚠️ நுவரெலியா- பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

⚠️ நுவரெலியா- பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

by admin

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை இன்று (பெப்ரவரி 21, 2026)  நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று முற்பகல் 08.00 மணி முதல் நாளை (பெப்ரவரி 22) முற்பகல் 08.00 மணி வரை அமுலில் இருக்கும்.

நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை, மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மஞ்சள் எச்சரிக்கை (Level 1 – Watch) நிலைக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை பதுளை மாவட்டத்தின் மகஹகிவுல, கந்தகெட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படுவதற்கு முன்னர் தென்படும் நிலத்தில் அல்லது கட்டிடங்களில் திடீரெனத் தோன்றும் வெடிப்புகள் , மரங்கள், மின்சாரக் கம்பங்கள் அல்லது வேலிகள் ஒருபுறமாகச் சரிதல், திடீரென நீரூற்றுகள் தோன்றுதல் அல்லது இருக்கும் நீரூற்றுகள் திடீரென வற்றிப்போதல்/சேற்று நிறமாக மாறுதல் , தொடர்ச்சியான பலத்த மழையின் போது நிலத்திலிருந்து எழும் அதிர்வுச் சத்தங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு NBRO அறிவுறுத்தியுள்ளது.

#NBRO #LandslideAlert #NuwaraEliya #Badulla #SriLankaWeather #SafetyFirst #DisasterManagement #LKA

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More