164
நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
நீதிமன்றத் தீர்ப்பால் ஆத்திரமடைந்த டிரம்ப், வெள்ளை மாளிகையிலிருந்து உரையாற்றினார்: இந்தத் தீர்ப்பை “பயங்கரமானது” என்று வர்ணித்த அவர், தனது கொள்கையை நிராகரித்தவர்களை “முட்டாள்கள்” என்று கடுமையாகச் சாடினார்.
புதிய 10% உலகளாவிய வரி (Global Import Tax):
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஒரு மிகப்பெரிய சட்டப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவர் விதித்த பெரும்பாலான உலகளாவிய இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிகார வரம்பு மீறல்: 6-3 என்ற நீதிபதிகளின் வாக்கு விகிதத்தில், ஜனாதிபதி தனது அதிகார வரம்பைத் மீறிச் செயல்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.
இந்தத் தீர்ப்பு, வரிகளை எதிர்த்துப் போராடிய வர்த்தக நிறுவனங்களுக்கும் பல்வேறு அமெரிக்க மாநிலங்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பின் மூலம், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட பில்லியன் கணக்கான டொலர் வரித் தொகையை நிறுவனங்கள் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
“வரித் தொகையைத் திரும்பப் பெறுவது அவ்வளவு எளிதாக நடக்காது, இதற்கான சட்டப் போராட்டம் பல ஆண்டுகளுக்கு இழுபறியாக இருக்கும்” என எச்சரித்தார்.
நீதிமன்றம் வரிகளை ரத்து செய்த சில நேரங்களிலேயே, அதற்கு மாற்றாக புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முதலீடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க இது அவசியம் என்று அவர் வாதிடுகிறார்.
“எங்களிடம் சிறந்த மாற்று வழிகள் உள்ளன, இதன் மூலம் நாங்கள் இன்னும் வலிமையடைவோம்” என்று அவர் சூளுரைத்துள்ளார்.
இந்த நடவடிக்கை உலகளாவிய வர்த்தகச் சூழலில் ஒரு புதிய நிச்சயமற்ற தன்மையையும், வர்த்தகப் போருக்கான சூழலையும் உருவாக்கியுள்ளது.
Spread the love

