165
மறைந்த குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான (Jeffrey Epstein) நட்பின் போது, மண்டல்சன் தனது பொதுப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து துப்பறியும் காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
:அவர் வர்த்தகச் செயலாளராக (Business Secretary) இருந்த காலத்தில், டவுனிங் ஸ்ட்ரீட் மின்னஞ்சல்கள் மற்றும் சந்தை உணர்திறன் கொண்ட ரகசியத் தகவல்களை எப்ஸ்டினுக்கு கசியவிட்டதாக லண்டன் மெட்ரோபாலிட்டன் காவற்துறையி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீட்டர் மண்டல்சன் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முற்றாக மறுத்துள்ளார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டரின் ‘கார்டன் மற்றும் டென்டன்’ தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை வாஷிங்டன் தூதராக நியமித்த பிரதமர் கீர் ஸ்டார்மரின் முடிவை விமர்சகர்கள் இப்போது கடுமையாகச் சாடி வருகின்றனர்.
முன்னாள் பிரிட்டிஷ் தூதரும், முக்கிய அரசியல் பிரமுகருமான பீட்டர் மண்டல்சன் (Peter Mandelson) லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சீருடை அணியாத காவற்துறையினரால் அவரது இல்லத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு, அடையாளமற்ற காவற்துறை காரில் விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன
.
________________________________________
Spread the love

