குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:-
கனகாம்பிகை புத்தகோவில் விவகாரம் பௌத்த மதத்திற்கு முரணானது என பாலியகொட கங்காராம பௌத்த விகாரையின் மதகுரு விமலகனா தேரர் தெரிவித்தார்
இன்றைய தினம் செவ்வாய் கிழமை 09.08.2016 கிளிநொச்சி பொன்னகர் பகுதிக்கு கம்போடியா பௌத்த மதகுரு லெச் சொனான் சகிதம் வருகைதந்த பாலியகொட கங்காராம பௌத்த விகாரையின் மதகுரு விமலகனா தேரர் அங்குள்ள நூறு குடும்பங்களுக்கு பாலியகொட கங்காராம விகாரையின் நிதி உதவியில் உணவுப் பொருட்கள், மற்றும் ஆடைகள் அடங்கிய சிறிய பொதியினை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார் நிகழ்வின் இறுதியில் கனகாம்பிகைக் கோவிலின் அருகில் ஆலயத்தின் மூன்றாவது வீதியினை மறித்து அனுமதி ஏதும் இன்றி புத்த கோவில் ஒன்று கட்டப்பட்டுவருகின்றது இது சம்பந்தமாக பௌத்த மதத்தின் மதகுரு என்றவகையில் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் நாமும் இந்து தெய்வங்களை வணங்குகின்றோம் ஒரு இந்துக் கோவிலின் அருகில் பௌத்த விகாரை அமைப்பது தவறில்லை அனால் உங்களால் குறிப்பிடப்பட்ட கனகாம்பிகைக் கோவிலுக்கு அருகில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரை அவ் ஆலய நிர்வாகத்தின் அனுமதி இன்றியோ அல்லது மக்களின் விருப்பமின்றியோ அமைக்கப்பட்டதாயின் அது பௌத்த ஆகமத்திற்கு முரணானது ஆனால் இக் கருத்தினை ஊடகங்களிற்கு என்னால் தெரிவிக்க முடியாது ஆனால் இவ் விகாரை அமைப்பு சம்பந்தமாக கிளிநொச்சியில் உள்ள பௌத்த மதகுருவுடன் உரையாடி ஒரு நல்ல முடிவை எடுப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் அவர் அங்கு நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போது சிங்கள மக்களுக்கே அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன என்று கூறுகின்றார்கள் அது உண்மையல்ல நானும் ஒரு வறுமையான பிரதேசத்தில்தான் வசிக்கின்றேன் அங்கு மக்கள் செறிவாக வாழ்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு எதுவித உதவியும் வழங்கப்படவில்லை இங்குள்ள தமிழ்மக்ககளுக்கும் அவ்வாறே உள்ளது ஆனால் நாட்டில் நிலவிய அசாதாரண நிலையால் தமிழ் மக்கள் பாரிய துன்பத்தை அனுபவித்திருப்பது உண்மைதான் தென்னிலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்கின்றோம் அதேபோல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் அவ் உரையில் தெரிவித்தார்