Home இலங்கைதையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – வழக்கு திகதியிடப்பட்டது

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – வழக்கு திகதியிடப்பட்டது

by admin

 

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளன.   தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என குற்றம்சாட்டி , தவிசாளர்கள் , வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக பலாலி காவல்துறையினரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தனித்தனியாக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த வழக்குகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , குற்றம் சாட்டப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து மூன்று வழக்குகளில் ஒரு வழக்கினை ஏப்ரல் மாதத்திற்கும் மற்றைய இரு வழக்குகளையும் எதிர்வரும் ஜூலை மாதத்திற்கும் மன்று திகதியிட்டுள்ளது.
 
#தையிட்டி # Thaiyitty  #விகாரை_எதிர்ப்பு  #தமிழ்_தேசிய_அரசியல்  #TamilPolitics
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More