நேற்று சனிக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரான் நாட்டுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளதனையடுத்து ஈரானிய அரசு 40 நாட்கள் தேசிய துக்க தினமாகவும், 7 நாட்கள் பொது விடுமுறையாகவும் அறிவித்துள்ளது. இத்தாக்குதலில் காமேனியின் மகள், பேரன், மருமகன் மற்றும் மருமகள் ஆகியோரும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், “உண்மை வாக்குறுதி 4” என்ற பெயரில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. துபாய், தார், பஹ்ரைன் (அமெரிக்க 5-வது கடற்படைத் தளம்), குவைத் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் ஆகிய பகுதிகளில் உள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்கள் மீது வரலாற்றில் இல்லாத அளவிலான “மிகக் கடுமையான தாக்குதல்” (most ferocious offensive) நடத்தப்படும் என IRGC எச்சரித்துள்ளது.
மொஜ்தபா காமேனி அல்லது ஹசன் கொமெய்னி அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, ஈரானின் ஜனாதிபதி, நீதித்துறைத் தலைவர் மற்றும் பாதுகாவலர் சபையின் (Guardian Council) ஒரு நீதிபதி ஆகியோர் அடங்கிய இடைக்காலத் தலைமைக் குழு நாட்டின் பொறுப்புகளைக் கவனிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#IranConflict #KhameneiSuccessor #MiddleEastWar #IRGC #TehranStrikes #WorldNews2026

