Home இலங்கைஈரானின் போர்க் கப்பல் IRIS Dena தொடர்பான மீட்பு பணிகள் தொடர்கின்றன!

ஈரானின் போர்க் கப்பல் IRIS Dena தொடர்பான மீட்பு பணிகள் தொடர்கின்றன!

by admin
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் போர்க் கப்பல் IRIS Dena தொடர்பான மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், குறித்த கப்பலில் இருந்து கடலில் மூழ்கிய ஈரானிய கடற்படையினரை மீட்கும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
இந்த மீட்பு பணிகள் கடற்படை கப்பல்கள் மற்றும் விசேட குழுக்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றன. கடலில் மாயமான கடற்படையினரை தேடும் நடவடிக்கைகளும், பாதுகாப்பான முறையில் அவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்த மீட்பு நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபடும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த காட்சிகளில், கடலில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கடற்படை பாதுகாப்பு அமைப்புகளும் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More