காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாதது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சாலீல் ஷெட்டியினால் இந்த அறிக்கை மன்னாரில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. பலவந்த காணாமல் போதல்களினால் நாட்டின் அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் வரையில் காயங்களை ஆற்றுப்படுத்த முடியாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில காணாமல் போன உறவுகள் பல தசாப்தங்களாக தங்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி அறியாது மிகுந்த வேதனையுடன் அல்லலுறுவதாகவும் பலந்த கடத்தல்கள் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலையை முடிவுறுத்த உரிய முனைப்புக் காட்டப்படவில்லை எனவும் சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.