171
யாழ்ப்பாணத்தில் முகமூடி கொள்ளையர்களினால் வீடு புகுந்து ஒரு தொகை நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டின் உரிமையாளர் மீதும் மூர்க்கத்தனமாக தாக்கு
சம்பவத்தில் காயமடைந்த வீட்டு உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வீட்டின் உரிமையாளர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்ட வேளை வீட்டின் உரிமையாளரும் கொள்ளையர்களை திருப்பி தாக்கியதில் கொள்ளையன் ஒருவன் காயங்களுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் கொள்ளையர்கள் வீட்டினுள் அத்துமீறி நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளது , அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினருக்கும் , காவல்துறை அவசர சேவை பிரிவினருக்கும் அறிவித்த போதிலும் , காவல்துறையினர் சுமார் 08 மணி நேர தாமதத்திற்கு பின்னரே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Spread the love

