Home உலகம் மெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் கொலையை கண்டித்து பத்திரிகை அச்சிடுவது நிறுத்தம்

மெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் கொலையை கண்டித்து பத்திரிகை அச்சிடுவது நிறுத்தம்

by admin


மெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து பத்திரிகை அச்சிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவின் பிராந்திய பத்திரிகையொன்றே இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளது. ஊடகவியலாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், கொலைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

எனினும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு எவ்வித தண்டனையும் விதிக்கப்படுவதில்லை என Norte de Ciudad Juarez  என்ற பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. பத்திரிகையை அச்சிடுவது நிறுத்தப்பட்டாலும் இணையத்தில் தொடர்ந்தும் செய்திகள் வெளியிடப்படும் என பத்திரிகை நிர்வாகம் அறிவித்துள்ளது. பத்திரிகையின் செய்தியாளரான Miroslava   என்ற ஊடகவியலாளர் கடந்த மாதம் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More