யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவரை கோப்பாய் காவல்துறையினா் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசிக்கும் குறித்த இளைஞன், பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததாக கோப்பாய் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது.
அந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், இன்றைய தினம் (சனிக்கிழமை) காவல்துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து 41 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காககாவல்துறையினா் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
#JaffnaUniversity #DrugArrest #KopayPolice #DrugFreeCampus #JaffnaNews

