யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் ஆயுதத்துடன் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுன்னாகம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கட்டுவான் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மூவர் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒருவரிடமிருந்து 2 கிராம் 340 மில்லிகிராம் “ஐஸ்” போதைப்பொருளும், மற்றொருவரிடமிருந்து 2 கிராம் 220 மில்லிகிராம் “ஐஸ்” போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனர். மேலும் மூன்றாவது நபரிடமிருந்து ஒரு வாளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.
#JaffnaCrime #IceDrugSeizure #ChunnakamPolice #SwordSeizure #JaffnaNews

