Home இலங்கைபோதைப்பொருள் கடத்தல் மூலம் சேர்த்த சொத்துக்கள்: சந்தேகநபரின் மனைவியின் தாயார் கைது

போதைப்பொருள் கடத்தல் மூலம் சேர்த்த சொத்துக்கள்: சந்தேகநபரின் மனைவியின் தாயார் கைது

by admin

 

2019 முதல் 2023 வரை  தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குக்கு போதைப்பொருள் கடத்தியதன் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடத்தல் நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த பணத்தை பயன்படுத்தி இரண்டு மாடி வீடு, 5 கடை அறைகள் கொண்ட கட்டிடம், ஒரு கார் மற்றும் 360 பவுண் தங்க நகைகள் உள்ளிட்ட சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர், இரண்டு மாடி வீடு மற்றும் கார் தொடர்பாக  மன்னாா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின் பயன்பாட்டிற்கு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக  காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

தங்க நகைகள் தொடர்பான விசாரணைகளில், அந்த நகைகள் சந்தேகநபரின் மனைவியின் தாயாரால் பல நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு, மன்னாா்ப் பகுதியில் உள்ள பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட தங்க நகைகள் என்பதை அறிந்திருந்தும் அவற்றை அடகு வைத்து விற்பனை செய்ததாகக் கூறி, நிதி தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் சந்தேகநபரின் மனைவியின் தாயார் நேற்று (15) மாலை மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

#MannarNews #DrugMoneyLaundering #AssetSeizure #IllegalAssetsInvestigation  #SouthIndiaSmuggling

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More