Home இலங்கை  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடி படகுகள் கைப்பற்றல்

  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடி படகுகள் கைப்பற்றல்

by admin

இலங்கையில்,  இலங்கை கடற்படை  மற்றும்  இலங்கை காவல்துறையினா் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பேருவளை கடற்கரை அருகே கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்ட ஒரு மீன்பிடி படகு, நீா்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் உத்தரவின் பேரில் போதைப்பொருள் கடத்தலுக்காக புறப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த படகு மார்ச் 13ஆம் திகதி காலியிலிருந்து புறப்பட்டதாகவும், பின்னர் கடற்படையினரால் தடுத்து Dikovita Harbor கொண்டு வரப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். இதில் இருந்த ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகில் இருந்து சுமார் 260 கிலோகிராம் எடையுடைய கோகெய்ன் அடங்கிய 10 சந்தேகப்பொட்டல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை,தேவேந்திரமுனை தெற்குக் கடலில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையில், 133 கிலோகிராம் ஹெரோயின் கொண்ட 123 பொதிகளுடன் இருந்த மற்றொரு மீன்பிடி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  இலங்கை காவல்துறை முன்னெடுத்து வருகிறது.

#DrugBustSL #SriLankaNavy #CocaineSeizure #HeroinSmuggling #PNB_SriLanka

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More