Home உலகம்அமெரிக்க வெளியுறவுக் கொள்கை தடுமாறுகிறதா? ஓமன் வெளியுறவு அமைச்சர் முன்வைக்கும் அதிரடி விமர்சனம்!

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை தடுமாறுகிறதா? ஓமன் வெளியுறவு அமைச்சர் முன்வைக்கும் அதிரடி விமர்சனம்!

by admin
சர்வதேச அரசியலில் நடுநிலை வகிக்கும் நாடாக அறியப்படும் ஓமன் (Oman), தற்போது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. மத்திய கிழக்கில் அமைதிக்காகத் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்து வரும் ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் சையித் பத்ர் அல் புசைதி (Sayyid Badr Albusaidi), ‘தி எகனாமிஸ்ட்’ (The Economist) இதழில் எழுதியுள்ள கட்டுரை உலகரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
📍 அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டது:- அதங்களுக்குச் சம்பந்தமில்லாத போர்களில் அந்த நாடு தேவையற்ற ஈடுபாட்டைக் காட்டுகிறது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சுமூகமான உடன்பாடு எட்டப்படும் நிலையில் இருந்தது. ஆனால், கடந்த பெப்ரவரி 28 அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான மிக முக்கியமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் நம்பிக்கைத் துரோகம் என்பதோடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“இந்தத் தாக்குதல் ஒரு தற்செயலான நிகழ்வல்ல; இது திட்டமிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையைச் சிதைக்கும் முயற்சி. அமெரிக்கா தற்போது ஒரு தெளிவற்ற, திசைதிருப்பப்பட்ட நிலையில் உள்ளது.” என சையித் பத்ர் அல் புசைதி விசனம் வெளியிட்டுள்ளார்.
🔍 மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றத்தைத் தணிக்க ஓமன் நீண்டகாலமாகத் தூதரக ரீதியாகப் பணியாற்றி வருகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல் ஓமன் போன்ற நட்பு நாடுகளுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் இந்த நகர்வு சரியானதா? உங்கள் கருத்துக்களைக் கமெண்டில் பகிருங்கள்! 👇
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More