அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானில் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிலையம் வெளியிட்ட தகவலின்படி, பெப்ரவரி 28ஆம் திகதி மோதல் ஆரம்பமானதிலிருந்து இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,186 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 1,394 பேர் பொதுமக்கள் எனவும், அதில் குறைந்தது 210 சிறுவர்கள் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1,153 பேர் இராணுவத்தினர் எனவும், மீதமுள்ள 639 பேரின் மரண விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல்களின் பின்னணியில், ஈரானில் மனிதாபிமான நிலைமை குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது.
#IranWar2026 #CasualtyReport #US_IsraelAttack #HumanRightsCrisis #MiddleEastConflict

