Home இலங்கைசித்த மருத்துவ பீட விரிவுரையாளர் படுகொலை – மகள், மருமகன் விளக்கமறியலில்

சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் படுகொலை – மகள், மருமகன் விளக்கமறியலில்

by admin

 

யாழ்ப்பாணம் சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் தயாளினி திலீபனின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மகள் மற்றும் மருமகனை, எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த இருவரும் இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதான சந்தேகநபரான மருமகன் கொலையை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மகள் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கூறி வரும் நிலையில் ,  முரணான வாக்குமூலங்கள் குறித்து காவல்துறையினா்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 உயிரிழந்த தாயாரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக மகளுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மயானத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் மீண்டும்  காவல்துறையினலால்  நீதிமன்றக் காவலின் கீழ் கொண்டு செல்லப்பட்டார்.

 #RemandOrder #JaffnaCourt #LecturerMurderCase #April2Deadline #Justice

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More