Home இலங்கைகடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக இருவருக்கு பதவி உயர்வு

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக இருவருக்கு பதவி உயர்வு

by admin

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக கிருஷ்ணன் அகிலன் மற்றும்  மரியதாஸ் ராஜேந்திரன் ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். பதவி உயர்வு பெற்ற இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனூடாக யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பணிப்பாளர் காரியாலயத்தில் தற்காலிக உதவி பணிப்பாளராக கடமை ஆற்றிய கிருஷ்ணன் அகிலன் நிரந்தர நியமனம் பெற்றுள்ளார்.  அதேபோல் யாழ். மாவட்ட கடற்றொழில் மீன்பிடி பரிசோதராக கடமை ஆற்றிய மரியதாஸ் றாஜேந்திரன் உதவி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர்களுக்கான நியமன கடிதங்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை கடற்றொழில் அமைச்சில்  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால், வழங்கி வைக்கப்பட்டது

#FisheriesPromotion #JaffnaFisheries #MinisterChandrasekaran #DepartmentOfFisheries #PublicServicePromotion
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More