ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சரவையை மாற்றியமைக்க முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தச் சட்டத்தின் 43(1) மற்றும் (2) ஆகிய சரத்துக்களின் உப பிரிவுகளின் ஊடாக இந்த விடயம் விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் மாற்றம் செய்வதாயின் பிரதமருடன் கலாந்தாலோசிக்க வேண்டுமென தெரிவித்துள்ள அவர் எனவே ஜனாதிபதியினால் அமைச்சரவை மாற்றம் குறித்து இறுதித் தீர்மானங்களை எடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.