Home உலகம்ஈரானின் “ஹார்முஸ் நாயகன்” கொல்லப்பட்டார் – இஸ்ரேல் தகவல்

ஈரானின் “ஹார்முஸ் நாயகன்” கொல்லப்பட்டார் – இஸ்ரேல் தகவல்

by admin

 

ஈரானின் முக்கிய இராணுவத் தலைவராக கருதப்படும் “ஹார்முஸ் நாயகன்” என அழைக்கப்படும்  அலிசா மசூமி (Alireza Masoumi)  கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பின் தகவலின்படி, மேற்கொள்ளப்பட்ட துல்லியமான தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல், பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது.

“ஹார்முஸ் நாயகன்” என அழைக்கப்பட்ட இவர், ஹார்முஸ் நீரிணை பகுதி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர் என அறியப்படுகிறது. ஆனால், இந்த தகவல் தொடர்பாக ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  அலிசா மசூமி ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் மற்றும் கடல்சார் கண்ணிவெடித் திட்டங்களின் மூளையாகச் செயற்பட்டவர் என்பதுடன் முன்னாள் தளபதி காசிம் சுலைமானியின் நெருக்கமானவர். காசிம் சுலைமானியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இவர் போற்றப்பட்டார்.

#AlirezaMasoumi #HeroOfHormuz #IsraelIranConflict #IRGCTehran #MiddleEastTension

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More