204
அமெரிக்கா தனது காகித நாணயங்களில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி Donald Trumpன் கையொப்பம், புதிய அமெரிக்க டொலர் நோட்டுகளில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக பதவியில் உள்ள ஜனாதிபதியின் கையொப்பம் சட்டபூர்வ நாணயங்களில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும் என்பதால், இந்த மாற்றம் அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றத்தின் கீழ், புதிய டொலர் நோட்டுகளில் அமெரிக்க நிதியமைச்சர் Scott Bessent அவர்களின் கையொப்பத்துடன் இணைந்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கையொப்பமும் அச்சிடப்படும். இதன் மூலம், 1861 ஆம் ஆண்டில் காகித நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நிலவி வந்த மரபான ‘Treasurer’ கையொப்பம் நீக்கப்படுகின்றது. இருப்பினும், நோட்டுகளின் வடிவமைப்பு, நிறம், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை மாற்றமின்றி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய மாற்றத்துடன் கூடிய முதல் $100 டொலர் நோட்டுகள் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அச்சிடப்படவுள்ளதாக அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பிற மதிப்புள்ள நோட்டுகளிலும் இந்த மாற்றம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் 250வது சுதந்திர ஆண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் நினைவூட்டல் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், ஜனாதிபதியின் பெயரும் உருவமும் அரசுத் திட்டங்கள், நிறுவனங்கள், போர் கப்பல்கள் மற்றும் நாணயங்களில் இடம்பெற செய்யும் பரந்த திட்டத்தின் ஒரு கூறாகவும் விளக்கப்பட்டுள்ளது.
Spread the love

