Home இலங்கைஇளவாலை வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் – விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு

இளவாலை வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் – விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு

by admin
இளவாலை பிரதேச வைத்தியசாலையில், வைத்தியர் கடமையில் இல்லாமையும் தொடர்பாக வெளியான செய்தி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ், இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியிடம் விளக்கம் கோரியுள்ளார்.
இளவாலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவன் நேற்றைய தினம் வியாழக்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்த நிலையில், சிகிச்சைக்காக இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு வைத்தியர்கள் கடமையில் இல்லை என கூறி , மாணவனை சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாதியர்கள் முதலுதவி அளித்தாவது , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வையுங்கள் என கோரிய போதிலும் , தாம் சிகிச்சை அளித்தால் , தாமே பொறுப்பேற்க வேண்டும் என கூறியும் , வைத்தியசாலையில் நோயாளர் வண்டி இல்லாததால் தனியார் வாகனம் எதிலாவது அழைத்து சென்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.
அதனை அடுத்து மாணவனை முச்சக்கர வண்டியில் சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் வெளியான செய்திகளின் அடிப்படையில் , விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயம்  இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியிடம் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் சம்பவம் தொடர்பில் விளக்கம் தருமாறு கோரியுள்ளது.
#IlavalaiHospital #HumanRightsSL #MedicalNegligence #JaffnaHealth #StudentSafety
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More