167
சவூதி அரேபியாவில் அமெரிக்கப் படைகளால் இயக்கப்படும் பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் (Prince Sultan Air Base) மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தபட்சம் 10 அமெரிக்கப் படைவீரர்கள் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று (மார்ச் 27, 2026) மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (Drones) இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கியுள்ளன. காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய எட்டுப் பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலின் போது அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான பல எரிபொருள் நிரப்பும் விமானங்கள் (Refueling aircraft) சேதமடைந்துள்ளன.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமான ‘Operation Epic Fury’ இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் இருந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
சவூதி அரேபியாவின் பாதுகாப்புத் தரப்பினர் சில அச்சுறுத்தல்களை முறியடித்த போதிலும், ரியாத்திற்கு தெற்கே அமைந்துள்ள இந்த முக்கிய விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு வளையத்தை மீறி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளின் பாதுகாப்பு குறித்து தற்போது சர்வதேச அளவில் கவலைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Spread the love

