நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கைது
நேபாள நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியே , இன்று சனிக்கிழமை அதிகாலை பக்தபூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த 2025 செப்டம்பரில் நேபாள இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது, அதனை ஒடுக்க முற்பட்டதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், “கடுமையான அலட்சியம்” காட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் நீதிபதி கௌரி பகதூர் கார்கி தலைமையிலான விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நாட்டின் அரசியல் சூழ்நிலையை பாதிக்கக்கூடியதாக பார்க்கப்படுகின்றது. முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சட்டத்தின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் புதிய பிரதமராகப் பாலேந்திர ஷா பதவியேற்ற மறுதினமே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளமை அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Nepal #KPSharmaOli #Former PM Arrested #Balendra Shah #Anti-Corruption Protest #Kathmandu

