Home உலகம்அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் திரிப்போலி கப்பல் மத்திய கட்டளைப் பகுதிக்கு சென்றது!

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் திரிப்போலி கப்பல் மத்திய கட்டளைப் பகுதிக்கு சென்றது!

by admin
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் திரிப்போலி (USS Tripoli – LHA 7) போர்க்கப்பல், அதிலுள்ள மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களுடன் கடந்த மார்ச் 27ஆம் திகதி அமெரிக்க மத்திய கட்டளைப் பொறுப்புப் பகுதிக்கு (U.S. Central Command area of responsibility) வந்தடைந்தது. அமெரிக்க ஜனாதிபதியின் நேரடிப் மேற்பார்வையில் இயங்கும் மத்திய கட்டளைப் பிரிவின் கீழ் இந்தப் பிராந்திய பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அமெரிக்கா-கிளாஸ் நிலம் மற்றும் நீர் நிலைகளில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்தப் போர்க்கப்பல், திரிப்போலி அம்பிபியஸ் ரெடி குரூப் (Tripoli Amphibious Ready Group) மற்றும் 31வது மெரைன் எக்ஸ்பெடிஷனரி யூனிட் (31st Marine Expeditionary Unit) ஆகியவற்றின் தலைமைக்கப்பலாகச் செயற்படுகின்றது. இதில் சுமார் 3,500 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள் பணியாற்றுவதுடன், போக்குவரத்து மற்றும் தாக்குதல் நடத்தும் போர் விமானங்கள், தரை இறங்கும் தாக்குதல் கருவிகள் மற்றும் தந்திரோபாய சொத்துக்கள் எனப் பலம் வாய்ந்த படைக்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
பெப்ரவரி மாதம் முதல் முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்பட்ட நகர்வுகளின் தொடர்ச்சியாக, இந்தப் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நட்பு நாடுகளுடனான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த வருகை அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More