Home உலகம்இஸ்ரேல் – ஈரான் போர்: 6,500-ஐ கடந்த காயமடைந்தவர்களின் எண்ணிக்கை! 24 மணித்தியாலங்களில் மட்டும் 148 நபர்கள் காயம்!

இஸ்ரேல் – ஈரான் போர்: 6,500-ஐ கடந்த காயமடைந்தவர்களின் எண்ணிக்கை! 24 மணித்தியாலங்களில் மட்டும் 148 நபர்கள் காயம்!

by admin
பெப்ரவரி 28, 2026 அன்று தொடங்கிய ‘சிங்கத்தின் கர்ஜனை’ (Operation Lion’s Roar) இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் ஒரு மாதத்தைக் கடந்து நீடிக்கிறது. இஸ்ரேலிய சுகாதார அமைச்சின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 148 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் போர் தொடங்கியதிலிருந்து காயமடைந்து வைத்தியசாலைக்குச் சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 6,594 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, கடந்த ஒரு நாளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் நடுத்தரமான நிலையிலும், 108 பேர் இலகுவான காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 31 பேர் போர்ச் சூழலினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பதற்றத்திற்காக (Anxiety) சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது 124 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஏவுகணைத் தாக்குதல்களின் போது பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியபோது காயமடைந்த பொதுமக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More