ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் தமிழக தலைமைச் செயலாளர், காவற்துறை ஆணையாளர் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், பாதுகாப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத் தியநாதன், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவற்துறை ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையாளர் கரன் சின்ஹா ஆகியோருடன் தேர்தல் ஆணையர்கள் நேற்று இந்த ஆலோசனையை நடத்தியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது தலைமைச் செயலாளரின் அறையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இதன்போது வாக்குப்பதிவின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வாக்குச் சாவடிகளில் நுண் பார்வையாளர் கள் நியமனம், பறக்கும்படைகள் எண்ணிக்கை அதிகரிப்பு, வருமான வரித் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், அனைத்து பகுதிகளிலும் கண் காணிப்பு கமராக்கள் பொருத்துதல், புகார்கள் மீதான நட வடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.