145
தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை எதிர்ப்பதற்கு இன்னும் இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுக்களை நடாத்தி வருவதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது .பொதுவான விடயங்களில் நாங்கள் ஒன்று பட்டு செயற்படுவது தொடர்பிலும் , தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வருகின்றன திட்டங்களை எதிர்ப்பது மற்றும் தீர்வு திட்டம் தொடர்பிலும் பேச்சுக்களை நடாத்தியுள்ளோம்
அத்துடன் மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்பது தொடர்பிலும் பேச்சுக்களை நடாத்தி இருக்கிறோம். இன்னும் இறுக்கமான கட்டமைப்பாக நாங்கள் தொடர்ந்து செயற்படுவது தொடர்பில் தமிழரசு கட்சி ஆராய்ந்து வருகிறது. அது தொடர்பில் நாங்கள் தொடர்ந்து பேச்சுக்களை நடாத்துவோம் என தெரிவித்துள்ளார்.
#Suresh Premachandran #ITAK #Tamil Arasu Katchi #TamilNationalAlliance #TamilPolitics #AllianceDiscussions #TamilRights #Provincial Council Election
Spread the love

