Home இலங்கைதையிட்டி காணி மீட்புப் போராட்டம்: நில உரிமையாளர்கள் தொடர் போராட்டம்!

தையிட்டி காணி மீட்புப் போராட்டம்: நில உரிமையாளர்கள் தொடர் போராட்டம்!

by admin
யாழ், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை அமைந்துள்ள தமது பூர்வீகக் காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. குறித்த விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்களை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த பல மாதங்களாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
.
இதன் தொடர்ச்சியாக, கடந்த வியாழக்கிழமை மற்றும் இன்றைய பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் நில உரிமையாளர்கள் தையிட்டி பகுதியில் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தமது வாழ்வாதார நிலங்களையும், குடியிருப்புக்களையும் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து, உரியவர்களிடம் கையளிக்கக் காவற்துறையினரும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More