Home இந்தியாஇந்திய லொறி உரிமையாளர்களின் போராட்டத்தினால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு

இந்திய லொறி உரிமையாளர்களின் போராட்டத்தினால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு

by admin


வாகனங்களுக்கான காப்புறுதிக்கட்டண  கட்டணம் உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வற்வரி உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் இந்திய லொறி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் கடந்த 30ம் திகதி முதல் லொறிகள்   பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தன.

இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் 7-வது நாளாக இன்றும் 30 லட்சத்திற்கும் அதிகமான லொரிகள் ஓடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் தமிழக அரசு சார்பில் மாநில லொரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகளுடன் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட போதும் 40 சதவீத காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியது தொடர்பாக இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்  பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது.

இந்தப் போராட்டத்தினால் லொரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1000 கோடி வீதம் 7 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளது எனவும்  ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More