சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டே சாட்சியமளிக்கக்கூடிய வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இது தொடர்பிலான யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். சாட்சியாளர்கள் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து சாட்சியமளிப்பதற்கு கடந்த ஆண்டே அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒலி, ஒளி காட்சி ஊடகங்களின் ஊடாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாட்சியமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இலங்கைக்கான தூதகரங்கள் உயர்ஸ்தானிகராலயங்களின் ஊடாக சாட்சியமளிக்கக் கூடிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.