Home இலங்கைபெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயிற்சி யாழ்ப்பாணத்தில்

பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயிற்சி யாழ்ப்பாணத்தில்

by admin

 

யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC) ஏற்பாடு செய்த பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் பயிற்சி செயலமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர், நிர்வாக முகாமையாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

முப்பதிற்கும் மேற்பட்ட பெண் அரசியற்செயற்பாட்டாளர்கள் இப்பயிற்சி செயலமர்வில் பங்கேற்றனர். பயிற்சியை Curveup நிறுவனத்தின் அனுபவமிக்க வளவாளர்கள் நடத்தியிருந்தனர். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதற்கான அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களை வழங்கும் நோக்கில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பயிற்சி செயலமர்வு தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மேலும் பல பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More