Home இலங்கைஎனது பிள்ளை ஏதோ ஒரு முகாமில்தான் இருப்பான் – தாயொருவரின் கதறல்

எனது பிள்ளை ஏதோ ஒரு முகாமில்தான் இருப்பான் – தாயொருவரின் கதறல்

by admin

இராணுவத்திடம் சரணடைந்த தன்னுடைய மகன் வேறு எங்கே போவது? அவன் ஏதோ ஒரு முகாமில்தான் இருப்பான் என தாயொருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மீட்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கவன ஈர்ப்பு நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மீட்பை வலியுறுத்தி கிளிநொச்சியில் பெப்ரவரி 20  தொடங்கப்பட்ட போராட்டம் இன்று 49ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தின்போது, இராணுவத்திடம் சரணடைந்த, போரின் இறுதியில் காணாமல் போன தம்முடைய பிள்ளைகளின் விடுதலையை வலியுறுத்தியே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஏதோ ஒரு முகாமில்தான் தன்னுடைய பிள்ளை இருப்பதாக நம்புவதாக தெரிவித்த அந்த தாயார் தனது பிள்ளை மாத்திரமின்றி இராணுவத்திடம் சரணடைந்த அனைத்துப் பிள்ளைகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More