வன்னி யுத்தத்தில் ஈடுபட்ட படை உயர் அதிகாரிகளை வெளிநாடுகளில் வைத்து கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வன்னி யுத்தத்தில் முக்கிய பங்களிப்பு வழங்கிய 25 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டால் அந்த நாடுகளில் வைத்து அவர்களை கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஒஸ்ட்ரியா, ஸ்பெய்ன் உள்ளிட்ட அகிலப் பிரகடனம் அமுல்படுத்தப்படும் பத்து நாடுகளில் இவ்வாறு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளுக்கு இந்த அதிகாரிகள் வந்தால் அவர்களை கைது செய்யுமாறு கோரி அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.