தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் துரித கதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறினால், தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடையக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என தமிழ் மக்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் கொள்கைகை விடவும் இந்த அரசாங்கத்தின் கொள்கைகள் மாறுபட்டதாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் எனினும் தமது மக்கள் இன்னமும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.