குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிலையியற் கட்டளையின் அடிப்படையில் சட்டத்தை உரிய முறையில் நிறைவேற்றவதற்கு சபாநாயகர் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்காத வேளையில் எவ்வாறு சட்டம் நிறைவேற்றப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சட்ட மூலத்தில் அரசியல் சாசனம் பற்றிய சில விடயங்கள் குறிப்பிப்பட்டிருப்பதனால், பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டது என பதிவிடப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும் அவ்வாறு பதிவிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் தீர்மானமொன்றை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.