கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை 54 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்திரை புதுவருட பிறப்போடு தங்களுக்கு நல்தொரு செய்தி கிடைக்க வேண்டும் என்றும். அடுத்த வருடத்திலாவது தங்களின் உறவுகளோடு புதுவருட நிகழ்வை கொண்டாடுவதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட எங்களுடை அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையினர் எங்களோடு வந்து இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனவும்; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று சித்திரைபுதுவருட பிறப்பில் அனைவரும் தங்கள் தங்கள் குடும்பங்களோடு வருடப் பிறப்பு நிகழ்வை கொண்டாடிக்கொண்டிருக்க நாங்கள் எங்களின் உறவினர்களுக்காக வீதியில் போராடிக்கொண்டிரு கின்றோம் இந்த நிலைமை மாறவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.