139
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் மீளவும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி வரையில் பிள்ளையானை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எம்.ஐ.எம். ரிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் பிள்ளையான் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிள்ளையான் 36ம் தடவையாகவும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love