காணிகளை விடுவிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, முப்படைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அல்லது பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கு அமைய காணிகளை விடுவிக்கத் தயார் என படையினர் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு தேவைகளுக்கு அவசியமற்ற எந்தவொரு காணியையும் வழங்கத் தயார் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.